10661 மௌனகுருவின் நாடகங்கள்.

சி.மௌனகுரு. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 372 பக்கம், விலை: ரூபா 1300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-442-3.

பேராசிரியர் சி.மௌனகுரு 1980களுக்கும் 1990களுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதி நூலுருவில் வெளிவந்த  சங்காரம், தப்பிவந்த தாடி ஆடு, வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள், மழை, சரிபாதி, தம்மைப் பிடித்த பிசாசுகள், சக்தி பிறக்குது, வனவாசத்தின் பின் ஆகிய எட்டு நாடக நூல்களினதும் பெருந்தொகுப்பு. இலங்கையின் தலைசிறந்த  நாடகவியலாளர்களுள் ஒருவராக விளங்கும் மௌனகுரு, பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் யாழ்.பல்கலைக்கழத்திலும் தனது கல்விப் பட்டங்களைப் பெற்றவர். யாழ். பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் பணியாற்றியபின் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வின் பின்னரும் மட்டக்களப்பில் அரங்க ஆய்வுகூடம் ஒன்றை நிறுவி நாடகத்துறை முயற்சிகளில் முழு வீச்சுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவர் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் 20க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.

ஏனைய பதிவுகள்