ஸ்ரீ. பிரசாந்தன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: அகில இலங்கைக் கம்பன் கழகம், 12, இராமகிருஷ்ண தோட்டம், இணை வெளியீடு, கொழும்பு: பூபாலசிங்கம் பதிப்பகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).
xviii, 263 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 22.5×14.5 சமீ., ISBN: 978-955-9396-65-9.
தமிழில் கீர்த்தனைகளால் உருவான முன்னோடி நாடகங்களுள் சிறப்புடையதென ஆய்வாளர்களால் சுட்டப்பெறும் இராம நாடகக் கீர்த்தனை, கம்பராமாயணம் போலவே ஸ்ரீரங்கநாதர் கோவிலில் அரங்கேற்றப்பட்ட சிறப்புடையது. ஆறு காண்டங்கள் 258 இசைப்பாடல்களால் ஆன இராம நாடகத்தில், கம்பராமாயணக் கதை முழுவதும் சுருங்கச் சொல்லப்பட்டுள்ளன. கம்பனின் படைப்பு பிரபல்யமாகி நிலைபெற்றுவிட்ட தமிழ்நாட்டில், அவர் தொட்ட கதைப்பகுதியைப் பாடும் துணிவுபெற்ற அருணாச்சலக் கவிராயர், வெளிப்பாட்டு வடிவை மாற்றியமைத்துள்ளார். விருத்தப்பாவில் கம்பன் தந்த காதையை, கவிராயர் கீர்த்தனைகளாகத் தந்துள்ளார். பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் ஆகிய ஐந்து காண்டங்களையும் இந்நூல் உள்ளடக்குகின்றது. இந்நூல் அகில இலங்கைக் கம்பன் கழகத்தினரின் 26ஆவது வெளியீடாகும்.