10664 இளையோர் இசை நாடகம்.

த.கலாமணி. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

viii, 103 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ.

நூலாசிரியர் அல்வாயைப் பிறப்பிடமாகக் கொண்டதொரு நாடகக் கலைஞர். இவரது தந்தையார் ச.தம்பிஐயா ஒரு அண்ணாவியாராவார். இந்நூலில் மார்க்கண்டேயர், காத்தவன் கருணை, ஆத்மலிங்கம், கண்ணப்ப நாயனார், பக்த பிரகலாதா, ஆகிய ஐந்து நாடகங்கள் இடம் பெற்றுள்ளன. மார்க்கண்டேயர் தவிர்ந்த பிற நான்கு நாடகங்களும் குறு நாடகங்களாகும். இவை சிவராத்திரி காலத்தில் சமய வைபவங்களில் மேடையேற்றம் செய்ய உகந்தவை. இந்நூல் 23ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்