ஜின்னாஹ் ஷரிபுத்தீன். மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரிண்டர்ஸ், 545, பருத்தித்துறை வீதி, நல்லூர்).
xviii, 310 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-54039-4-8.
காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் கவித்துவ ஆற்றலின் வெளிப்பாடாக மலர்ந்துள்ள மற்றுமொரு காவியம் இது. 1991இல் வெளிவந்த முதலாவது காவியமான மஹ்ஜபீன் காவியத்தைத் தொடர்ந்து வெளிவந்த அவரது பத்தாவது காவியமாக யாழ்ப்பாணத் தமிழ் மன்னன் எல்லாளனின் வீர வரலாற்றைக் கூறும் காவியமாக இது அமைகின்றது. 2013இன் சிறந்த காவியமாக இலங்கை இலக்கியப் பேரவை- யாழ் இலக்கிய வட்ட விருது, எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்-தமிழியல் விருது, கிழக்கு மாகாண நூல் தெரிவில் சிறந்த காவியத்துக்கான விருது ஆகியவற்றைப் பெற்றது.