ஜின்னாஹ் ஷரிபுத்தீன். மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 1வது பதிப்பு, நவம்பர்; 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xxv, 123 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-54039-0-0.
மூசாநபி அவர்களின் வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பெற்ற இக்காவியம் புலவர்மணி, காப்பியக்கோ, ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் ஒன்பதாவது காவியமாகும். இறைவேதம் அருளப்பெற்ற முதலாவது இறைதூதர் மூஸாநபி அவர்களின் பூவுலக வாழ்வைத் திருமறை கூறுவதன் பகைப்புலத்தில் நின்று காவியமாகப் பாடியுள்ளார். கிறிஸ்துவத்தின் விவிலியத்தில் மோசே என்று அழைக்கப்படும் மூசா நபி இஸ்ராயேல் இனத்தின் லேவி எனப்படும் குருத்துவ குலத்தில் பிறந்தவர். இஸ்ராயேல் இனத்தின் ஆண் குழந்தைகள் கொல்லப்படும் சூழ்நிலையில் மோசே அதிசயமான முறையில் காப்பாற்றப்படுகின்றார். அரண்மனைச் சூழலிலும் பாலைவனச் சூழலிலும் வளரும் அவர் அரசர்களுக்குரிய சகல கலைகளையும் கற்றுத் தேர்கிறார். இறுதியில் மிகப்பெரும் விடுதலை வீரனாக உயர்கின்றார். திருக்குர் ஆனிலும் திரு விவிலியத்திலும் இடம்பெறும் மூசா நபியின் (மோயீசனின்) கதை உள்ளத்தை உருக்கும் உணர்ச்சிக் காவியமாகும். கடவுளுடன் பேசிய இக்காவியநாயகனின் கதையை (நாயனொடு வசனித்த நந்நபி) சுவைகுன்றாமல் கவிஞர் ஜின்னாஹ் தனது காவியத்தில் படைத்திருக்கின்றார்.