10672 அந்த ஒரு நிமிடம்: சிறுகதைத் தொகுப்பு.

இராகி (இயற்பெயர்: இரா.கிருஷ்ணபிள்ளை). காரைதீவு (கிழக்கு மாகாணம்): கணேஸ்வரி குடிசார் நிர்மாணங்களும் ஆலோசனைகளும், 36/A, மத்திய வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (சாய்ந்தமருது: ரோயல் பிரின்டர்ஸ்).

xii, 112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

இந்நூலில் 1964ம் ஆண்டு சுதந்திரனில் வெளியான கதைகளுடன் 2008ஆம் ஆண்டின்பின் ஆசிரியர் எழுதிய கதைகளும் சேர்ந்து இடம்பெற்றுள்ளன. நீண்ட காலப் பரப்பின் சமூக, கலாச்சார மாற்றங்களை இக்கதைகள் பிரதிபலிப்பதாயுள்ளன. மனித வாழ்வியலில் காணப்படும் சமூகப் பிரச்சினைகளும், விரக்தியினால் ஏற்படும் வேதனைகளும், மனிதாபிமான உணர்வுகளும் பெரும்பாலான கதைகளை நகர்த்திச் செல்வதாயுள்ளன. அந்த ஒரு நிமிடம், நெருக்கடிக்குள் நிர்ப்பந்தம், மனச் சிதைவு, ஆற்றாமை, உரிமை, மனதில் உறுதி வேண்டும், மனிதாபிமானம், ஈரம், யாதுமானவன், கடமை, கவசம், நினைத்ததும் நடந்ததும், உள்ளத்தூய்மை, சரியா தப்பா ஆகிய 14 சிறுகதைகள் இற்ந்நூலில் இடம்பெற்றள்ளன. காரைதீவை வாழ்விடமாகவும், பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும் கொண்ட கவிஞரும் எழுத்தாளருமான இராகி ஒரு கலைப்பட்டதாரி ஆசிரியராவார்.இராகியின் முதல் நூல் உறவுகள் என்ற தலைப்பில்  2008இல் வெளியாகியது. 50 ஆண்டுகால இலக்கியப் பரிச்சயம் மிக்க இவரது முதல் சிறுகதை பாண்டியூர் இராகி என்ற புனைபெயரில் சரியா தப்பா என்ற தலைப்பில் 1964இல் சுதந்திரனில் வெளிவந்தது. இது இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57343).

ஏனைய பதிவுகள்

14787 பாலைவனத்துப் புஷ்பங்கள் (நாவல்).

மலரன்னை (இயற்பெயர்: திருமதி அற்புதராணி காசிலிங்கம்). அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, மார்கழி 2019. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). iv, 78 பக்கம், விலை: ரூபா