உவர்மலை வி.எஸ்.குமார். திருக்கோணமலை: கற்பகம் இலக்கியச் சோலை, 15, வித்தியாலயம் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜனவரி 2008. (திருக்கோணமலை: V’man’s Graphics).
xiv, 106 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-50115-3-2.
வீரகேசரி வார வெளியீடு, மித்திரன், லண்டன் புதினம், பாரிஸ் ஈழமுரசு உள்ளிட்ட பல பத்திரிகைகளில் வெளியாகிய 14 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் தாயகத்தில் வாழ்ந்தவேளை மனதில் நிலைத்த சம்பவங்கள் கதைகளின் மையப்பொருளாகியுள்ளன. காதலைப் பேசும் கதைகளும், ஆணாதிக்கம், சந்தேகம், சம்பிரதாயங்கள், மூடக்கொள்கைகள், சாதியம் என்பன கதைக் கருக்களாகின்றன. கடலோரக் கனவுகள், அப்பா, நிஜங்கள் ஆகிய கதைகள் யதார்த்த வாழ்வைச் சித்திரிக்கின்றன. செவ்வாய் தோஷம் என்னும் நம்பிக்கை ஒரு பெண்ணின் வாழ்வை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை சுட்டிக்காட்டி சமூகத்திற்கும் பெற்றோருக்கும் அந்த மூடநம்பிக்கையை வலுவுடன் உடைத்தெறியப்பட வேண்டும் என்று ஒரு கதையில் ஆசிரியர் விளக்குகின்றார். நூலாசிரியர் தற்போது லண்டனில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்.