த.கலாமணி. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
vi, 86 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ.
தனது முதலாவது வெளியீட்டை (பாட்டுத்திறத்தாலே- சிறுகதைத் தொகுப்பு/த.கலாமணி) 2008இல் கண்ட ஜீவநதியின் 25ஆவது வெளியீடு இதுவாகும். த.கலாமணி எழுதிய அம்மாவின் உலகம், நிழல், தந்தையரும் தனயரும், அக்கினிக் குஞ்சு, கசிவு, அவலம், எங்கெங்கு காணினும், மனிதர்கள் ஆகிய ஏழு சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது. அம்மாவின் உலகம், நிழல் ஆகிய கதைகள் தாய்ப்பாசத்தின் பிணைப்பினை வலியுறுத்துகின்றன. தந்தையரும் தனையரும் என்ற கதை அன்பு காட்டுவதில் இரண்டு தந்தைமாருக்கிடைப்பட்ட வேறுபாட்டை பதிவுசெய்கின்றது. அக்கினிக் குஞ்சு, இளைய தலைமுறையினரின் புதிய பார்வையையும் அவர்களது சமூக வளர்ச்சியையும் எடுத்து விளக்குகின்றது. எங்கெங்கு காணினும் என்ற சிறுகதை அவுஸ்திரேலிய கலாசார விழுமியங்களை எடுத்துரைப்பதுடன் பேரன் வாழ்க்கைப் பிறழ்தலில் மாறியதற்கான காரணத்தையும் அழுத்தமாகப் பதிவுசெய்கின்றது.