ஏரம்பு சரவணபவன். டென்மார்க்: ஏரம்பு சரவணபவன், Hybenvet 63 ST TV, 8700 Horsens, 1வது பதிப்பு, ஜுலை 2011. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).
103 பக்கம், புகைப்படம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-53564-0-4.
திருக்கோணமலையைச் சேர்ந்த சிறந்த புகைப்படக் கலைஞரான ஏரம்பு சரவணபவன் டென்மார்க்கில் புலம்பெயர்ந்து வாழ்பவர். தனது சிறுகதைகளில் புலம்பெயர் வாழ்வின் நெருக்கடிகள், தனிமனித இன்னல்கள், காதல், சமூகப்பிரச்சினைகள் என்பவற்றைத் தொட்டுச் செல்கிறார். பெரும்பாலானவை, வீரகேசரி மற்றும் தினக்குரல் ஞாயிறு மலர்களில் வெளியானவை. அழியா நினைவுகள், காதல் என்னகடைச்சரக்கா?, கடல் கடந்த காதல், மாதவி, ஒரு புல்லாங்குழல் ஊமையானது, வாழ்க்கை என்பது கேட்ட வரமா? விதி வரைந்த பாதை ஆகிய ஏழு கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50107).