சாயிசசி (இயற்பெயர்: இராஜி சிவஞானப்பிரகாசம்). கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 202 செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆவணி 2011. (வத்தளை: கிறிப்ஸ் பிரிண்டேர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 70/7, கனல் வீதி, ஹெந்தளை).
244 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 22×14.5 சமீ.
அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் சாயி சசியின்; இலக்கிய அறிமுகம், சிட்னி தமிழ் பட்டதாரிகள் சங்கத்தின் வெளியீடான கலப்பை சஞ்சிகையின் வாயிலாக அரங்கேறியது. இச் சிறுகதைத் தொகுதியில் இவர் எழுதிய வரிசைகள், உன்னை வென்று நீ வாராய், செல்வக் களஞ்சியமே, ஆத்ம சங்கமம், பார்வை ஒன்றே போதுமே, படிகள், பார்வைகள், நிலவுக்குப் பயந்து, சிவகாமி நான் உனது சிதம்பரனே, நல்லாசிகள், தெய்வீக முடிச்சுகள், கொம்புத்தேன், வரவேற்பு, பறவைகள் பலவிதம், நிழல்கள் ஆகிய பதினைந்து கதைகள் இடம்பெற்றுள்ளன. புகலிடத் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகள், அவர்களின் கலாச்சாரப் பண்பாடுகள், பற்றியும் கதைகளினூடாகக் கூறும் ஆசிரியர், சிறந்த ஆன்மீகக் கருத்துக்களைக் கதைகளுக்குப் பொருந்தும்வகையில் கூறிவைப்பதுடன் தனது கதைகளினூடு புனிதத் தலங்களுக்கான யாத்திரைகளுக்கும் நம்மை அழைத்துச் செல்கின்றார். சுற்றுலாத் தலங்களைத் தன் கதைகளினூடு நம் மனக்கண்ணில் நிறுத்துவது ஆசிரியரின் கற்பனைத் திறனுக்குச் சான்றாகின்றது.