இ.இராஜேஸ்கண்ணன். உடுப்பிட்டி: சாத்வீக சுருதி, இமையாணன் கிழக்கு, 1வது பதிப்பு, ஏப்ரல்; 2015. (உடுப்பிட்டி: ஆகாயம் பதிப்பகம், இமையாணன் கிழக்கு).
xx, 83 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18×13 சமீ., ISBN: 978-955-7740-00-3.
சிறுவர் உளவியலை மையமாகக் கொண்டு பின்னப்பட்ட ஆசிரியரின் சிறுகதைகளை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள இந்நூலில் வாசக்கட்டி, சுமப்பவர்கள், பூக்கள், தலைவிதிப்படி, நீண்டதூரம், இரகசியமாய்க் கொல்லும் இருள், துகிலுரிப்பு, மானக்கேடு, தூவானம் ஆகிய ஒன்பது கதைகள் இடம்பெற்றுள்ளன. இன்று உலகெங்கும், குறிப்பாக ஈழத்தமிழ்ச் சமூகத்தில் முதன்மைபெற்றுவரும் பிள்ளைப்பருவத்தின் சமூகவியல், உள-சமூகப்பணி ஆகியன சமூகத்தில் உரியவாறு ஆழ வேர்விட இவ்விலக்கியப் படைப்புகள் துணைநிற்கின்றன. இந்நூலுக்கான விரிவான அணிந்துரையை திருமதி கோகிலா மகேந்திரன் வழங்கியுள்ளார்.