10681 இற்றைத் திங்கள்.

பத்மா சோமகாந்தன் (புனைப்பெயர்: புதுமைப் பிரியை). கொழும்பு 6: மீரா பதிப்பகம், 291/6-5/3A, எட்வேர்ட் அவெனியூ, ஹவ்லொக்  டவுன், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (மஹரகம: தரஞ்சி பிரின்ட்ஸ், நாவின்ன).

xx, 176 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 978-955-53921-8-1.

ஆசிரியரின் ஐந்தாவது சிறுகதைத் தொகுதி. ‘அற்றைத்திங்கள் அவ்வெண்நிலவின்..’ என்ற ஒளவையாரின் பாடல் வரிகள் புறநானூற்றில் இடம்பெற்ற துயரம் நிறைந்த பாடல்களுள் ஒன்று. பாரிமகளிர் தம் அன்புத் தந்தையையும் செழிப்பான பறம்பு மலையையும் இழந்த சோகத்தில் பாடிய இப்பாடலின் வரிகள் ஈழத்தமிழரின்  பேரிழப்பின் மனவலியின் குறியீடாக இங்கு அமைகின்றது. இத்தொகுப்பிலுள்ள 13 கதைகளும் அவற்றின் கருவாக ஈழத்தின் துயரத்தையும், மக்களின் அன்றாட வலிகளையும் கொண்டிருக்கின்றன. அட்டைகள், மோகம் கலைந்தது, ஓநாய்களின் காலம், இன்னும் கலையாத இருள் மேகங்கள், சிப்பிக்குள் ஒளிரும் முத்துக்கள், தொன்னையும் நெய்யும், காயமுறும் கலாசாரம், வரையப்பட்ட வட்டங்கள், செத்தால் யாரும் சிரியாரோ?, வன்முறை வடு, திடமான முடிவாக, சுவாலை, இற்றைத் திங்கள் ஆகிய தலைப்புகளில் அமைந்த கதைகள் இத்தொகுப்பில் உள்ளடங்குகின்றன. இந்நூல் மீரா வெளியீட்டகத்தின் 103ஆவது நூலாகும்.

ஏனைய பதிவுகள்