தெணியான் (இயற்பெயர்: கந்தையா நடேசு). அல்வாய்: பூமகள் வெளியீடு, பூமகள் சனசமூக நிலையம், கொற்றாவத்தை, அல்வாய் மேற்கு, 1வது பதிப்பு, நவம்பர் 2007. (அல்வாய்: மதுரன் கிறாப்பிக்ஸ் அன்ட் ஓப்செட் பிறின்டர்ஸ், அல்வாய் வடமேற்கு).
(10), 162 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-50591-0-7.
நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஆக்க இலக்கியம் படைக்கும் தெணியானின் சிறுகதைத் தொகுப்பு. ஏற்றத் தாழ்வில்லாததொரு சமூகத்தைத் தன் பேனாவால் உருவாக்குவதையே முழுமூச்சாகக் கொண்டவர். சொத்து, மாத்துவேட்டி ஆகிய இரு சிறுகதைத் தொகுப்பகளை முன்னர் வெளியிட்ட தெணியானின் மூன்றாவது சிறுகதைத் தொகுதி இது. இச்சிறுகதைத் தொகுப்பில் 15 கதைகள் உள்ளன. இவற்றில் 10 கதைகள் மல்லிகையில் பிரசுரமானவை. மற்றவை வீரகேசரி, ஜீவநதி, முதுசொம், அஞ்சலி, வாரமுரசொலி ஆகியவற்றில் வெளியானவை. கதைகள் அனைத்தும் நேர்த்தியாக சமூக அவலங்களைச் சித்திரிக்கின்றன. சமூகத்தில் நிலவும் அநீதிகளையும் குறைபாடுகளையும் துலாம்பரமாக விளக்குகின்றன. இன்னொரு புதிய கோணம், கூரை ஒன்று தான், தீண்டத்தகாதவன், அப்பா ஏன் அழுகிறார், இறுதி மூச்சுள்ளவரை, ஒரு மாணவி ஒரு ஆசிரியன் ஒரு தந்தை, பாதுகாப்பு, ஆதாயங்கள், திராவிலை, வாழத்துடிக்கிறாள், மனிதன் உள்ளே இருக்கிறான், இந்திரன்கள், அவனுக்கும் ஒரு மனைவி இருந்தாள், மாயை, பிஞ்சுப்பழம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.