சு.குணேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: யா/தொண்டைமானாறு விரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம், தொண்டைமானாறு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (நெல்லியடி: தமிழ்ப்பூங்கா அச்சகம்).
xiii, 91 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவினையொட்டி தேசிய மட்டத்தில் நடாத்திய சிறுகதைப் போட்டியில் பரிசில் பெற்ற 10 சிறுகதைகளும் பிரதேசப் படைப்பாளிகளின் மூன்று சிறுகதைகளும் கொண்ட தொகுப்பு. தேவி பரமலிங்கம் (குருவிச்சை), சி.கதிர்காமநாதன் (விநோத உடைப் போட்டி), செ.குணரத்தினம் (விருந்து), நடராசா இராமநாதன் (சபதம்), ஆரபி சிவகுகன் (முற்றுப்புள்ளிகள் முடிவுகளல்ல), ஆனந்தராணி நாகேந்திரன் (பாகுபாடு), பொலிகையூர் சு.க.சிந்துதாசன் (நரம்பறுந்த வீணை), கே.ஆர்.திருத்துவராசா (ஒரு பிடி மண்ணோடு), எச்.எப்.ரிஸ்னா (வரம்), மு.இரத்தினம் (தனிமரம்), கி.நவநீதன் (நிறங்கள் அழிகின்ற கோலங்கள்), இ.உதயசங்கர் (அவள் அப்படித் தான்), குந்தவை (இறுக்கம்) ஆகிய படைப்பாளிகளின் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.