இராமு சரவணமுத்து. கொடிகாமம்: அருள்மிகு திருநீலகண்டப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினர், மீசாலை வடக்கு, தட்டான் குளம், 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிறின்டேர்ஸ், இல. 424, காங்கேசன்துறை வீதி).
viii, 92 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ.
தரிசனங்கள் என்ற முதலாவது சிறுகதைத் தொகுப்பிற்குப் பின்னர் வெளிவரும் ஆசிரியரின் 11 சிறுகதைகளைக் கொண்ட இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது. அகலிகை மீண்டாள், வாடகை வீட்டில் விறைத்துப் போகும்போது, தேர் இழுக்கும் சூழல், இத்து வரும் சுமைதாங்கிகள், குட்டைகள் நதியாவதில்லை, கூடு தேடும் கோகிலங்கள், புனருத்தாரணம், தகனம், முரண்பாடுகள், எதற்கும் நாணயம் தேவை, அமர்க்களம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. கதைசொல்லும் முறையும் மொழிநடையும் நவீனத்துவமுடையதாயுள்ளது. பல இடங்களில் படிமங்கள் கலந்த ஒரு கவித்துவ நடையைக் கையாண்டுள்ளார். ஈழத்தமிழரின் வாழ்வும் வளமும் வரலாறும் பண்பாடும் பழக்க வழக்கங்களும் விழுமியங்களும் இக்கதைகளினூடாக மௌன ரகசியமாகக் கசிகின்றன. அமரர் ஞானரதனின் (வை.சச்சிதானந்தசிவம்) பன்முகப்பார்வை கொண்ட அட்டைப்படம் நூலுக்கு மேலும் கவர்ச்சியைத் தருகின்றது.