ஜே.கே. (இயற்பெயர்: ஜெயக்குமரன் சந்திரசேகரம்). அவுஸ்திரேலியா: வண்ணம் வெளியீடு, PO Box 467, Toongabbie, New South Wales 2146, 1வது பதிப்பு, 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(6), 344 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ஐளுடீN: 978-0-9922784-1-0.
அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் ஜே.கே., படலை என்ற தனது இணையத்தளத்தை இயக்கிவருகின்றார். தனது இளமைக்கால நினைவுகளை சுவாரஸ்யமான கதைகளாக இவ்விணையத்தில் தொடர்ந்து எழுதிவருகின்றார். அவை சிறு கதைகள் என்ற எல்லைக்கும் அப்பால், ஒரு கதைசொல்லியின் அறிவுபூர்வமான உள்ளத்தைத் தொடும் உரையாடலாக பல சந்தர்ப்பங்களில் அமைந்துவிடுகின்றது. அனுபவத்தையும் புனைவையும் சரியான அளவையில் கலந்து ஏராளமான நினைவுத் தளும்புகளுடன் இதனை எழுதியிருக்கிறார். நுட்பமான விபரிப்பும், நளினமான, சிலசமயம் ‘நக்கலான” உரைநடைப்பாணியும் கொல்லைப்புறத்துக் காதலிகளை எளிமையாக அறிமுகம் செய்கின்றன. பங்கர், கடவுள், கம்பவாரிதி, அரோகரா, யாழ்ப்பாணத்துக் கிரிக்கெட், குட்டியன், கக்கூஸ், அன்புள்ள ஆங்கில இலக்கியா, ஏகன் அநேகன், விறகு, ச்சோ ஸ்வீட் சுஜாதா, சந்திரன் மாஸ்டர், கொட்டில், சுப்பர் ஸ்டார், மகாபாரதம், மணியாள், மணிரத்னம், இருவர், என்மேல் விழுந்த மழைத்துளியே, சுரணிமாலா, குட்டி ஆகிய 21 தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.