இணுவில் பவா. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2012. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆப்செட்).
x, 92 பக்கம், சித்திரங்கள்;, விலை: இந்திய ரூபா 50., அளவு: 18×12.5 சமீ.
ஓர் ஆன்மீகவாதியும் இந்துமத குருவுமான பவாக் குருக்கள் எழுதிய பத்து சிறுகதைகளின் தொகுப்பு இது. ஆசிரியர் பல்துறை சார்ந்தவர்களுடனும் பழகக் கிடைக்கும் வாய்ப்பினாலேயே அவர்களின் குறை நிறைகளை அறிந்து அவற்றைக் கருக்களாகக் கொண்டு இச்சிறுகதைகளை வடித்துள்ளார். என் மாதாந்திர ஓய்வூதியம், உறவுகள், காதல் சடுகுடு, நவயுகம், புளியமரம், உத்தர தரிசனம், வினையால் ஒரு வெள்ளைப்புறா, பக்திப் பரிசு, கச்சான் ஆச்சி, பக்குவம் ஆகிய பத்துக் கதைகள் இதில் அடங்கியுள்ளன. இத்தொகுப்பிலுள்ள கதைகளில் புளியமரம், உத்தர தரிசனம், வினையால் ஒரு வெள்ளைப்புறா, என்பன கடந்த மூன்று தசாப்தங்களில் தமிழர் பட்ட பாதிப்புகளை விளக்குகின்றன. ஏனைய கதைகள் சமூகம் சார்ந்த பல்வேறு விடயங்களைக் கூறுகின்றன. சிந்தனையைத் தூண்டும் சிறுகதைகள் இவை.