பத்மா சோமகாந்தன். சென்னை 600026: குமரன் பப்பிளிஷர்ஸ், 3. மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வட பழநி, 1வது பதிப்பு, டிசம்பர் 2008. (சென்னை: சிவம்ஸ்).
238 பக்கம், விலை: இந்திய ரூபா 90., அளவு: 21×14 சமீ.
இந்நூலிலுள்ள கதைகள் இலங்கையின், தமிழ்ச் சமூகத்தின் யதார்த்த நிலையைக் கூறமுனைகின்றன. இலங்கைத் தமிழரின் வரலாற்றின் ஒரு போராட்ட, துன்பியற் காலகட்டத்தின் மூன்று தசாப்த காலத்தைப் பிரதிபலிப்பன. விடுதலைப்போரினால் எழும் இடப்பெயர்வுகள், ஓட்டங்கள், அகதி முகாம் அல்லல்கள், பசி, பட்டினி, பெண்கள் குழந்தைகளின் வேதனைகள், உயிரிழப்புகள் யாவையும் இக்கதைகள் மூலம் அறியலாம். இலங்கையின் கல்விக்கூடங்கள், மலையகத் தமிழரின் வாழ்வு, உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழ்பவரின் கலாசாரப் பாதிப்புக்கள், பெண்ணியக் கருத்துக்கள் என்பனவும் கதைகளினுள் புதைந்துள்ளன. இதயத்தைத் தொட்டுச் சிந்தனையைத் தூண்டவல்ல 30 கதைகள் இத்தொகுப்பில் தேர்வுசெய்யப்பட்டு இடம்பெற்றுள்ளன. கடவுளின் பூக்கள், பெரு நெருப்பு, பேடு, இரத்த பாசம், பொய்?, கரும்பலகைக் காயங்கள் (நூலின் தலைப்பில் கரும்பலகைக் காவியங்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது), நல்லமுத்து, பெண்மை வென்றது, புத்தன் பரம்பரை, சருகும் தளிரும், உறவும் பிரிவும், கதியற்ற வசந்தங்கள், இறப்புக்கள், அண்ணாவியின் காதலி, சக்தி, ஒரு தளிரும் இரு இலைகளும், செருப்பு, உயரப் பறந்தாலும், வேல்முருகின் பொங்கல், பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிட, ஒரு தீக்கோழி தலையை உயர்த்திப் பார்க்கிறது, மனிதச் சருகுகள், நைவேத்தியம், பனங்காணி, மெல்ல விரியும் சிறகுகள், அட்டைகள், மோகம் கலைந்தது, சுவாலை, காயமுறும் கலாசாரம், வன்முறை வடு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள இக்கதைகள் முன்னர் சுதந்திரன், தினகரன், வீரகேசரி, மல்லிகை, கலைச்செல்வி, கலைவாணி. தினத்தந்தி ஆகிய ஊடகங்களில் பிரசுரமானவை.