சாந்தன். சென்னை 600011: அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம் (அறிவுலகின் திறவுகோல்), 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (சென்னை 600 005: பாரதி அச்சகம்).
136 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 22×14 சமீ.
ஈழத்தின் பிரபல எழுத்தாளர்களுள் ஒருவரான ஐயாத்துரை சாந்தன், அறுபதுகளின் நடுக்கூற்றிலிருந்து எழுதத் தொடங்கியவர். சொல்லமுடியாத பாடல், போர்க்காலப் பூக்கள், அர்த்தம், கட்டடங்கள், மயிலுச்சாமி கோயில், அதிரவு, சிட்டுக்குருவி, பறக்கும் நினைவுகள், பாதை, கோழை, இருக்கிறது, சுற்றிவளைப்பு, விழிப்பு, பின்னல், கோபம், மீள்தல், மகள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட சாந்தனின் 17 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இக்கதைகள் போர், மற்றும் கால மாற்றங்களால் ஏற்பட்ட இழப்புகளைப் பற்றிப் பேசுகின்றன. படைப்பாளியின் சூழல் பற்றிய உணர்வும் ‘பாதை” உள்ளிட்ட சில கதைகளில் பிரதிபலிக்கின்றன.