ஜுனைதா ஷெரீப் (இயற்பெயர்: கே.எம்.எம்.ஷெரீப்). காத்தான்குடி: கே.எம்.எம்.ஷெரீப், 27, லேக் டிரைவ், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2014. (கொழும்பு 10: ருனுர் கொம்ப்யூபிரின்ட், 51/42, மொஹிதீன் மஸ்ஜித் வீதி).
(10), 236 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-95096-9-1.
ஆசிரியரின் சிறுகதைகளின் தொகுப்பு. பெயர்ப் பலகை, கேள்விக்கென்ன பதில், கரப்பான் பூச்சி, ஒரேயொரு வாக்கு, அழுக்குச் சாரன், சுமைதாங்கிகள், காதலன், ஆபரேஷன் சக்ஸஸ், முதலில் உட்புறம், முற்பகல் செய்யின், செல்லாக்காசு, சீதக்காதினி, ஐநூறு ரூபாய், தொடரும் துயரங்கள், சத்தம் ஒரு குத்தம், மன்னனும் மகாத்மாவும், பொல்லடி, பெருமூச்சு இராகங்கள், ஒன்று – ஒன்று ஸ்ரீ மூன்று, நமதூரான் டிரஸ்ட் ஆகிய 20 சிறுகதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இலங்கை தேசிய நூலக சேவைகள் சபையின் நிதியுதவியுடன் இந்நூல் வெளிவந்துள்ளது. கிழக்கு மாகாண சபையின் 2014ம் ஆண்டுக்கான சாகித்திய விருது இந்நூலுக்கு வழங்கப்பட்டது. நூலின் பின் அட்டையில் நூலாசிரியரின் புகைப்படத்துடன் அவரைப் பற்றியும், அவருக்குக் கிடைத்த சாகித்திய விருதுகள் பற்றியுமான தகவல்கள் உள்ளன. கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் 1940இல் பிறந்தவரான முகம்மது ஷெரீப், 1967இல் வானொலி நாடகமொன்றின் மூலம் தனது மனைவியின் பெயரையும் இணைத்து ஜுனைதா ஷெரீப் ஆக இலக்கியவானில் சிறகடிக்கத் தொடங்கியவர். காத்தான்குடி மத்திய மகாவித்தியாலயத்தில் கல்விகற்ற இவர் தனது 18ஆவது வயதிலேயே அரச சேவையில் இணைந்து இலங்கை நிர்வாகசேவைப் பரீட்சையில் சித்தியெய்தி பிரிவுக்காரியாதிகாரி, உதவி அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், திணைக்களத் தலைவர், அமைச்சுகளின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் போன்ற உயர்பதவிகளை வகித்தார். தமிழில் இவர் நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளையும் வானொலி நாடகங்களையும் நாவல்களையும் எழுதியிருக்கிறார். அவற்றில் சில நூலுருவிலும் வெளிவந்துள்ளன. அவ்வகையில் வெளிவரும் மற்றொரு சிறுகதைத் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 41016).