வ.சிவராசா, பொன்.புத்திசிகாமணி, அம்பலவன் புவனேந்திரன், பொ.சிறீ ஜீவகன் (தொகுப்பாசிரியர்கள்). ஜேர்மன்: யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம், 1வது பதிப்பு, தை 2015. (நெல்லியடி: பரணி அச்சகம்).
xxxx, 415 பக்கம், வலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
2013 இல் இலங்கைவாழ் தமிழ் எழுத்தாளர்களுக்காக யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற கதைகளுடன் மேலும் தரமான சில கதைகளையும் கொண்ட தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. 134பேர் 141 சிறுகதைகளை அனுப்பியிருந்தனர். அவற்றில் தேர்ந்த ஐம்பது கதைகளே இவை. மூன்றாமவர் தீர்ப்பு (தெய்வா ராமச்சந்திரன்), வடுக்கள் (எம்.சி.நஜிமுதீன்), விழாக்கள் தொடருகின்றன (அழகு கனகராஜ்), பண்பெனப்படுவது (எஸ்.ஐ.நாகூர்கனி), ஆயிரத்தில் ஒருத்தி (ஜெயநாயகம் கேதாரன்), பூவிதழின் புனிதம் காத்து (எச்.எல்.எம்.நிஸார்), சக்தீ (கனஹொ கந்தசாமி), கலைந்துபோன கனவுகள் (அனுராதா பாக்கியராஜா), பிராயச்சித்தம், முதுமை என்னும் பூங்காற்று (மு.சிவலிங்கம்), மனிதத்தின் மடியில் பரிசாக விழுந்தாள் (கெக்கிறாவ சஹானா), விட்டில் (அ.வா.முஹ்சீன்), மண்வாசம் (ஜே.றுக்மாங்கதன்), வேறையாட்கள் (பாலகிருஷ்ணன் அன்னோஜன்), வாடகைவீடு (யூலியஸ் விஜயகுமார் விஜயசங்கர்), கனவுகளின் சமாதி (பி.வேதநாயகம்), எங்கட பெரியபொட்டு ரீச்சர் (ச.சந்திரகுமாரி), தொடரும் துயரங்கள் (ஜுனைதா ஷெரீப்), மண்கொலுசு (ஆரோக்கியம் எட்வேர்ட்), காலம் மாறிப் போச்சு (தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா), குஞ்சியப்பு (நடராசா இராமநாதன்), கூடு (அமிர்தலிங்கம் கஜன்), அறிவுக்கு மனசில்லை (சண்முகலிங்கம் ராஜீஷன்), பட்டாம்பூச்சி (யாழ் தர்மினி பத்மநாதன்), திருமணப்பரிசு (எஸ்.பி.கிருஷ்ணன்), படராத முல்லை (பெரியசாமி ஸ்ரீகந்தநேசன்), சருகைவேட்டி (சௌந்தரராஜன் லெனாட் லோறன்ஸோ), விழா நாயகன் (தென்பொலிகை குமாரதீபன்), கேள்விகளே விடையாக (அருள்மணி சுப்பிரமணியம்), காசிருந்தால் வாங்கலாம் (சின்னராஜா உதயகுமார்), உள்ளத்தின் குரல் (நடராஜா ஜெபராஜா), புதிய பாண்டவர் (மாலாதேவி மதிவதனன்), பிராயச்சித்தம் (க.கோபாலபிள்ளை), புயல் பிடுங்கிய பூந்தளிர் (கிருஷ்ணபிள்ளை நவநீதன்), ஏன் அழுதான் (மு.பு.முகமது ராபி), ஒரு நூல் வெளியீட்டு விழா (வாகரைவாணன்), சொல்லித் தெரிவதில்லை (குணரத்தினம் ஜெயகுணசீலன்), தம்பி முடித்துவைத்த கல்யாணம் (எஸ்.ஏ.ஐ.மத்தியூ), நாலரை மணிக்கே போகலாமே (கே.விஜயன்), எங்கேயும் எப்போதும் (இப்னு அஸ{மத்), பூமிகா காத்திருக்கிறாள் (பசுபதி உதயகுமார்), உறங்கிய முதல் இரவு (கயூறியா தர்மதாசா), அவள் மீண்டும் சுமங்கலி (சுமித்திரா கனகரத்தினம்), மனிதம் வாழும் (எம்.எப்.ரிம்ஷா), யன்னலோர வெளிச்சம் (பிறிஞ்சியா தங்கராசா), யாரிடம் சொல்லி அழுவது (பொ.புஷ்பராஜா), ஏக்கங்களின் பெருமூச்சு (அற்புதராணி காசிலிங்கம்), மேகங்கள் விலகும் வேளை (சிவதாரணி யூட் பிரின்ஸன்), மன உறுதி (கூடலூர் ச.அ.இராசநாயகம்), சூரியன் மறைகிறான் நாளையும் விடிவதற்காக (குருநகர் த.பரமலிங்கம்) ஆகிய 50 கதைகள் இடம்பெற்றுள்ளன.