நெலோமி அன்ரனி குரூஸ். வவுனியா: விபுலம் வெளியீடு, இல. 154, 2ம் கட்டை, மன்னார் வீதி, வேப்பங்குளம், 1வது பதிப்பு, 2008. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம், இல. 73 னு, இரண்டாம் குறுக்குத் தெரு).
88 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×13.5 சமீ., ISBN: 978-955-99420-1-6.
வவுனியா தேசிய கயல் கல்லூரியின் விரிவுரையாளரான திருமதி நெலோமி அன்ரனிகுரூஸ் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தின் முன்னாள் தமிழ் ஆசிரியையுமாவார். இவர் எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பு இதுவாகும். அவஸ்தை, உயிர்ப்பு, அவனுக்குத் தெரியும், தியாக பொம்மைகள், கோயில் உள்ள ஊர், பயணம், போலிகள், சண்டை வரப்போகுது, பெரியபிள்ளை, பால்வெள்ளை, துரோகம், தொல்லைபேசி ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. எமது அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சமூகப் பொறுப்பற்ற சம்பவங்களினாலும், கலாச்சார சீரழிவுமிக்க மனித நேயமற்ற வாழ்வியல் முறைகளாலும் ஆசிரியையான இவரது உள்ளத்திலெழுந்த உணர்வலைகளின் வெளிப்பாடாகவே இக்கதைகள் அமைகின்றன. கவிஞர் நாவண்ணனின் புதல்வியான இவர் கவித்துவம்மிக்க ஆத்மாவின் ராகங்கள் (2005) என்ற கவிதைத் தொகுப்பினையும் எழுதி வெளியிட்டுள்ளார். சிறுகதைத் தொகுதிகளில் இதுவே இவரது முதல் படைப்பாகும்.