கா.அருளானந்தம். கரவெட்டி: கலை ஒளி வெளியீடு, கரணவாய் கிழக்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (கொழும்பு 6: ரெக்னோ பிரின்டர்ஸ், வெள்ளவத்தை).
(2), 140 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 18.5×13 சமீ.
‘ரயிலில் ஒரு ராகம்’ என்ற சிறுகதைத் தொகுதியை வழங்கிய ஆசிரியரின் இரண்டாவது வெளியீடாக அவரது அனுபவங்களின் திரட்சியாக அமைந்த சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. சிறுகதைகள் என்பதைவிடத் தனது ஆசிரியப் பணியின்போது நிகழ்ந்த சுவாரஸ்யமான உண்மைச் சம்பவங்களின் பதிவாகவே இந்நூலைக் கருதமுடிகின்றது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஆசிரியராக, சேவைக்கால ஆலோசகராக, அதிபராகப் பணியாற்றிய இந்நுலாசிரியர் இக்கதைகளின் மூலம் நல்லதொரு கதைசொல்லியாக இலக்கிய உலகில் அறிமுகமானவர்.