பவானி சிவகுமாரன். கொழும்பு 6: மீரா பதிப்பகம், 291/6-5/3A, எட்வேர்ட் அவென்யூ, ஹவ்லொக் டவுன், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (மஹரகம: தரஞ்சி பிரின்ட்ஸ், நாவின்ன).
160 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18.5×12 சமீ., ISBN: 978-955-53558-0-3.
இத்தொகுதியில், சொப்பனத் திருமணம், நம்மவர்கள், தோற்ற மயக்கங்கள், கனவோடு நீ, நினைவோடு நான், குடைபிடிக்கும் நினைவுகள், மீண்டும் புதிதாய்ப் பிறப்போம், கோடை காலத் தூறல்கள், மாறுதே நம் வானிலை, சிறகுகள் முளைக்குதே, மீட்சியா என்ன விலை?, சொந்தமில்லை சோகமில்லை, என்னுள்ளே ஏதோ, கப்பல் விட்டார் முன்னவர்கள், நிழல் கொஞ்சம் தா, நிஜங்களின் தரிசனம் ஆகிய 15 சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த பதினைந்து கதைகளையும் ஒன்றுதிரட்டி நோக்கும்போது, வாழ்வின் உறுத்தலும், தேடலும், சமூகத்தின் சிங்காரத் தனத்தை மீள்நோக்கலும் நியமப் புள்ளிகளிலே நின்று நிதானத்தை முன்னெடுத்தலும் நிகழ்வதை அவதானிக்கமுடிகின்றது. மீரா பதிப்பக வெளியீட்டுத் தொடரில் 96ஆவது மீரா வெளியீடாக இச்சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது.