10718 நெருப்பு வாசல்: சிறுகதைத் தொகுதி.

அன்புடீன் (இயற்பெயர்: கலந்தர் லெவ்வை). அக்கரைப்பற்று: பெருவெளி பதிப்பகம், 31C, உப தபாலக வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2011. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன்).

xx, (8), 148 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-8756-02-7.

அம்மாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பாலமுனை கிராமத்தில் பிறந்தவர் கலந்தர் லெவ்வை. அன்புடீன், கலந்தர் முகையதீன் ஆகிய பெயர்களில் எழுத்துத்துறையில் ஈடுபட்டவர். அஞ்சல் திணைக்களத்தில் பணியாற்றியவர். கவிதைத்துறையில் முன்னதாக முகங்கள் (1988), ஐந்து தூண்கள் (2000), சாமரையில் மொழி கலந்து (2002), மரணமல்ல ஜனனம் (2011) ஆகிய நான்கு நூல்களை வழங்கியுள்ள அன்புடீனின் முதலாவது சிறுகதைத் தொகுதி இது. இந்நூலில் இஸ்லாமிய சமூகம் சார்ந்த பிரச்சினைகளை அலசும் 14 கதைகள் உள்ளன. ஒரு கிராமத்துச் சிறுமி அசைபோடுகிறாள், கடல்நீரின் கண்ணீர், மலர்ந்தும் மலராத ஒரு மல்லிகையின் மனவெளி, உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின், ஒரு தலை இராவணன், நெருப்புவாசல், அமைதி மூழ்கிய பேரழுகை, ஒரு மழை நாள், சலனம், சபலம், சபதம், வீணான கோழிக்குறுக்கும் கோதான கோழிமுட்டையும், தேவதைகள் சாவதில்லை, குணம், அழகின் விலை, பருந்துகள் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. வறுமை காரணமாக புதுவருட தினத்தில் கூட புத்தாடை வாங்கமுடியாத நிலையை ஒரு கிராமத்துச் சிறுமி அசைபோடுகிறாள் என்ற கதையில் சொல்லப்படுகின்றது. கடல்நீரின் கண்ணீர் என்ற கதை மீனவத் தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் பணக்கார முதலைகளின் கபடங்களை வெளிப்படுத்துகின்றது. மலர்ந்தும் மலராத என்ற கதை- கத்தம் வைப்பது போன்ற சடங்குகளை வெறுக்கும் மகன், தாய்ப்பாசத்தின் காரணமாக அதனை ஏற்பதைக் கூறுகின்றது. ஒருதலை இராவணன் கதை, நாட்டின் குழப்பநிலைக்கு அடிப்படைக் காரணி பொருளாதாரமே என்கிறது.

ஏனைய பதிவுகள்