நந்தினி சேவியர். கொழும்பு 10: கொடகே பொத் மெதுர, எஸ்.கொடகே சகோதரர்கள், இல.675, பி.டி.எஸ். குலரத்ன மாவத்தை, 1வது பதிப்பு, 2011. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
104 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-30-3146-4.
1967இல் ‘பாரம்’ என்ற சிறுகதையின் மூலம் சுதந்திரன் பத்திரிகை வழியாக படைப்புலகுக்கு அறிமுகமானவர் நந்தினி சேவியர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (சீனசார்பு) வாலிப இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர். தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் சுயமான தேடலில் இலக்கியத்தைப் பயின்றவர். விளிம்புநிலை மக்கள்பற்றிய சிறுகதைகளே இவரது சிறப்பம்சமாகக் கருதப்படுகின்ற நிலையில் ஈழத்துத் தமிழ் இடதுசாரிக் கட்சியின் ஒரு காலகட்ட வரலாற்றை (1960-1985) இவரது கதைகள் பிரதிபலிக்கின்றன. இத்தொகுதியில் மேய்ப்பன், ஒற்றைத் தென்னை, கடலோரத்துக் குடிசைகள், மனிதம், நெல்லிமரப் பள்ளிக்கூடம், தவனம், எதிர்வு, விருட்சம் ஆகிய எட்டு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.