அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
260 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-8715-90-1.
இதுவரை 40க்கும்அதிகமான நூல்களை எழுதியுள்ள அகளங்கனின் முதலாவது சிறுகதைத் தொகுதியாக இந்நூல் வெளிவருகின்றது. பெரும்பாலான கதைகள் ஞானம் சஞ்சிகையில் வெளிவந்தவை. பொதுவாக வன்னிமண்ணின் வாழ்வியலை இக்கதைகள் பதிவுசெய்கின்றன. சில கதைகள் இலங்கை அரசியலை, எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவுகளைப் பதிவுசெய்துமுள்ளன. முற்றத்துக் கரடி, வத்துக்குளம், கொக்குக் குஞ்சுகள், இந்தப் பிள்ளைக்கு, ஒரு கால், நாட்டு நடப்பு, யாழ்தேவி, நாளைக்கும் பூ மலரும், பேயாய் கணங்களாய், மீண்டும் ஒரு குருஷேத்திரம், மண்ணின் மைந்தர்கள், வெய்யில் மட்டுமா சுடும், பாம்பின் குட்டி பாம்பு, வேலை தேடி, வேலிகளும் போலிகளும், வழக்குத் தவணை, கொண்டல் பிசின், குண்டுமணிச் சாமியார், தீக்குளிப்பு, துருவ நட்சத்திரம், மனித தெய்வங்கள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட அகளங்கனின் 21 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயத்தின் விபுலாநந்தர் படைப்பிலக்கிய விருதினை 2017இல் இந்நூலுக்காகப் பெற்றவர்.