10726 வெந்து தணிந்தது காலம்.

மு.சிவலிங்கம். கொழும்பு 11: மலைநாட்டு எழுத்தாளர் மன்றம், பாக்யா பதிப்பகம், இல. 10, இரண்டாவது ரோகிணி ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (ஹட்டன்: தாரணி அச்சகம், 4ஏ, ஸ்டார் சதுக்கம்).

xix, 133 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-1805-04-3.

1960களில் எழுதத் தொடங்கிய மு.சிவலிங்கம், இலக்கியத்திற்கு அப்பாலும் அரசியல், சமூக கலை இலக்கிய செயற்பாட்டாளராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். மலைகளின் மக்கள் (1991), ஒரு விதை நெல் (2004), ஒப்பாரிக் கோச்சி (2010) ஆகிய சிறுகதைத் தொகுதிகளையடுத்து நான்காவதாக இத்தொகுப்பு வெளிவந்துள்ளது.  எலிகளும் பூனைகளும் மாடுகளும், வெந்து தணிந்தது காலம், உத்தியோகம் புருஷலட்சணம், கேட்டிருப்பாயோ காற்றே, மீண்டும் பனை முளைக்கும், மந்திரி இட்ட தீ, மேற்கில் தோன்றிய உதயம், புது மாப்பிள்ளை, மந்திரி கட்டாத பாலம், கும்பா, அம்மாவும் தீபனும், பேய்களும் சேது மாதவனும், ஒரு ரட்சகனின் புறப்பாடு, அவைகளும் அவர்களும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 14 சிறுகதைகளை இத்தொகுப்பு உள்ளடக்குகின்றது. சமூக விளிம்புக்குள் தள்ளப்பட்ட விளிம்புநிலையினரின் துயரங்கள், ஈழத்தில் எல்லாம் இழந்து அகதிகள் என்னும் பெயரில் மரத்தடிகளில் மிருகங்களாய் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மானுடப் பூக்களின் துயரங்கள், தேயிலை-ரப்பர் பெருந்தோட்ட வனாந்தரங்களில் வாழ்வைப் படிப்படியாக இழந்து கொண்டிருக்கும் மலையகத்தவரின் அவலங்கள், இந்த மனித அவலங்களுக்கிடையே வருங்காலத்தைக் குறித்து எழும் வீறுகள் என்பன கதைகளின் களங்களாகின்றன.

ஏனைய பதிவுகள்

10 Eur Noppes Bonus Buiten Betaling

Volume Gratis 45 spins no deposit 2024 – Gigantisch Wild Fre Spins Plusteken Bonussen Dingen Loeren Wij Misselijk Gedurende Afloop Reviews? Hoedanig Wij De Uitgelezene

Kelly hagyományos számológép

Tartalom 10bet promóció | Ufc Parlay Picks Zero Wagering Helyi kaszinó Kanadában: Szerencsejáték-létesítési ösztönzők a játék feltételeivel szemben Amerikai lehetőség Pontosan milyennek tűnik több People