ஜுனைதா ஷெரீப் (இயற்பெயர்: கே.எம்.எம்.ஷெரீப்). கல்முனை: இஸ்லாமிய நூல்வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, 1வது பதிப்பு, பெப்ரவரி 1985. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்).
(5), 137 பக்கம், விலை: ரூபா 24.00, அளவு: 19×13 சமீ.
பொதுவாக எமது சமூகத்தில், குடும்பங்களில் குடும்பத்துக்காக உழைப்பவராக ஒருவரே இருப்பார். ஏனையோர் அவரது உழைப்பிலேயே தங்கியிருப்பது மட்டுமல்லாமல் அந்த உழைப்பாளியின் திறமை, சக்தி, என்பவற்றை விமர்சனம் செய்வதுடன் வருமானம் போதாது எனக் குறையும் காண்பார்கள். இதன் காரணமாகக் குடும்பங்களில் பொருளாதாரச் சிக்கல்கள் காணப்படுவதுடன் வாழ்க்கை மேம்படுத்தல்களுக்கான வாய்ப்பும் இல்லாது போகின்றன. இதனைக் கருப்பொருளாகக் கொண்டு இக்கதை பின்னப்பட்டுள்ளது. இலங்கை வானொலியின் முஸ்லிம் நிகழ்ச்சியில் தொடர்கதையாக வாசிக்கப்பட்டதன் நுல்வடிவம் இதுவாகும். வீரகேசரி பத்திரிகையின் சகோதர வெளியீடான மித்திரன் வார இதழில் தொடர் நவீனமாகவும் இக்கதை வெளிவந்திருந்தது.