அ.இரவி. தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (சென்னை 600077: மணி ஓப்செட்).
215 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-82033-78-3.
1958 (ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தெட்டு).
அ.இரவி. தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 3வது பதிப்பு, நவம்பர் 2023, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (சென்னை 600018: கிளிக்டோ பிரின்ட், ஜலீல் டவர், 42, K.M.தாசன் வீதி, தேனாம்பேட்டை).
216 பக்கம், விலை: இந்திய ரூபா 275., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-82033-78-3.
1958ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்மீது ஏவப்பட்ட இன வன்முறை குறித்துப் பேசுகின்ற இந்த நாவல், இன வன்முறை நிகழ்ந்த நாட்களிலும் அதன்பின் வந்த நாட்களிலும் மனநிலை ரீதியாக ஒரு தமிழ்க் குடும்பம் சந்திக்கும் நெருக்கடிகளைச் சித்திரிக்கின்றது. யாழ்ப்பாணம் அளவெட்டியில் 1960இல் பிறந்த அ.இரவி, தெல்லிப்பழை, மகாஜனக் கல்லூரியில் கற்றுத் தேர்ந்து 1982இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சென்று, தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்று 1986இல் பட்டதாரியானவர். பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் 1992இல் அரங்கியலில் முதுகலைமாணிப் பட்டமும் பெற்றார். 1995இல் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் கல்வியியல் டிப்ளோமா சான்றிதழ் பெற்று பத்தாண்டுக்காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். புதுசு, சரிநிகர், புலம், ஒரு பேப்பர் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் இவரும் ஒருவர். லண்டனில் வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். தனது 20ஆவது வயதில் எழுதத் தொடங்கிய அ.இரவி, பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பாராட்டையும் பெற்றவர்.