வே.தில்லைநாதன். கொழும்பு 14: வீரகேசரி வெளியீடு, த.பெட்டி எண் 160, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1978. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி).
218 பக்கம், விலை: ரூபா 3.90, அளவு: 18×12 சமீ.
சாவகச்சேரியைச் சேர்ந்த மூத்த எழுத்தாளரான வே.தில்லைநாதன், திருக்கோணமலையை வாழ்விடமாகக் கொண்டவர். மட்டுவிலான், லீலா மணாளன் போன்ற புனைபெயர்களிலும் இலக்கிய உலகில் இவர் அறியப்பட்டுள்ளார். இந்நாவல் 1978ம் ஆண்டுக்கான சாஹித்திய மண்டலப்பரிசை வென்றது. கண்மணி என்ற கதாபாத்திரத்தினூடாக இந்நாவல் தமிழ்ச் சமூகத்தின் பெண்களை, அவர்கள் சந்திக்கும் இன்னல்களை, சமூகத்தில் பெண்மை சார்ந்த கருத்துநிலைகளை விவாதிக்கின்றது. கல்வி அறிவு பெற்றமையால் இயல்பாகவே எழுகின்ற சுதந்திர வேட்கையைக் கூட, ‘நாலு பேர் என்ன சொல்வார்களோ’ என அடக்கிக்கொண்டு அதே வேளையில் சமூகத்திற்கு அடங்கிய கட்டுப்பெட்டிகளாகவும் வாழவிரும்பாது திரிசங்கு சொர்க்கத்தில் அலைந்துகொண்டிருக்கும் எமது பெண்ணினத்திற்கு சமூகத்தால் இழைக்கப்படும் அநீதி பூமராங் ஆகத் திரும்பிவந்து அந்தச் சமூகத்தையே தாக்குவதை இக்கதை அழகாகச் சொல்கின்றது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 125154).