ஜுனைதா ஷெரீப் (இயற்பெயர்: கே.எம்.எம்.ஷெரீப்). கொழும்பு: கே.எம்.எம்.ஷெரீப், 3/2, இரண்டாவது ஒழுங்கை, இரத்மலானை, 1வது பதிப்பு, டிசம்பர் 1998. (கொழும்பு 6: பிரின்ட் கிராப்பிக்ஸ், 4, நெல்சன் பிளேஸ்).
xiv, 123 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×14.5 சமீ., ISBN: 955-95096-4-0.
வனப்பிரதேசத்தையும், அவ்வனங்களில் வாழும் உயிரினங்களையும் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட நாவல் இது. தமிழ், முஸ்லிம், சிங்கள மொழி பேசுபவர்களும், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்களுமான இளைஞரகள் நால்வர்களை வைத்துப் பின்னப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய சொத்துக்களான வனத்தையும், வனத்தில் வாழும் ஜீவராசிகளையும் பாதுகாப்பதிலும், அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கு அவ்வனத்தினாலும் அங்குவாழும் விலங்குகளாலும் பெறப்படக்கூடிய பலன்களை அனுபவிப்பதற்காக அவற்றை பாதுகாப்பாக விட்டுச்செல்ல வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதிலும் இந்நாவல் நகர்த்தப்படுகின்றது. மேலும் இன ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் இந்நாவலின் வழியாக பதியம் வைக்க ஆசிரியர் முனைந்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21200).