ஜுனைதா ஷெரீப் (இயற்பெயர்: கே.எம்.எம்.ஷெரீப்). காத்தான்குடி: கே.எம்.எம்.ஷெரீப், 27, லேக் டிரைவ், 1வது பதிப்பு, நவம்பர் 1990. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்).
133 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21×14 சமீ., ISBN: 955-95096-1-6.
தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களின் ஒற்றுமையை மையமாகக் கொண்டு புனையப்பெற்ற நாவல் இது. இரு இனங்களினதும் கலாச்சாரங்கள், பண்பாடுகள் ஆகியவை கதையில் ஆழமாக இழையோடுகின்றன. இவ்விரு இனங்களினதும் ஒற்றுமையைக் குலைக்க எவ்வாறுதான் ஆதிக்க சக்திகள் முயற்சிசெய்தாலும் இதயங்களினால் ஒன்றிணைந்த அவர்களை நிரந்தரமாகப் பிரிக்க முடியாது என்பதை முன்னிறுத்தி இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. இலங்கை தேசிய நூலக சேவைகள் சபையின் நிதி உதவியுடன் இந்நூல் வெளியிடப்பட்டது.