செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 12/3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழனி, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (சென்னை: சிவம்ஸ்).
192 பக்கம், விலை: இந்திய ரூபா 90., அளவு: 18×12 சமீ.
இந்நாவலில் காதல் உணர்ச்சி, காம வேட்கை என்னும் இரண்டையும் பற்றிக் கற்றறிந்த தாமரை, காதல் உணர்ச்சி உந்தலில் காதலிப்பதாக வரும் சிவசேகரனின் குடும்ப வாழ்வில் இணைவதற்கு முன்வருகிறாள். பெற்றோரின் பொருள்நிலை சார்ந்தமுடிவை ஏற்கிறாள். சிவசேகரனின் காதல் உணர்வுகள் அடங்கியதும், தாமரை பொருள் நிலையை மேம்படுத்த கல்வியை மீண்டும் தொடங்குகிறாள். தன் பொருள்நிலையை உறுதிப்படுத்தவும் உழைக்கிறாள். குரூரமான குடும்பச் சிக்கல்களை எதிர்கொள்கிறாள். எதிர்பாராத நிகழ்ச்சிகளை அவள் எதிர்கொள்ள நேர்கிறது.