ஆசி.கந்தராஜா. சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, முதல் தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, முதல் தெரு, சூளைமேடு).
212 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 20.5×13.5 சமீ., ISBN: 978-93-81322-29-1.
திரிவேணி சங்கமம், தூதர்கள், உயரப்பறக்கும் காகங்கள், பாவனை பேசலன்றி, அடிவானம், கீதையடி நீயெனக்கு ஆகிய ஆறு கதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. உயிரியல் விஞ்ஞானி, பல்கலைக்கழகப் பேராசிரியர், நாடகக் கலைஞர், ஒலிபரப்பாளர் ஆகிய பல்வேறு பின்புலங்களையும் ஒருங்கே கொண்டவர் ஆசி. கந்தராஜா. இவரது கதைகள் புலம்பெயர்ந்த இலங்கையர்கள்; மத்தியில் முகமூடிகள் அணிந்து நாடகமாடும் வேஷதாரிகளின் வாழ்க்கையைக் குடைந்து அவர்களது சுயரூபங்களை உலகக்குக் காட்டும் முனைப்புடன் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக அவர் கதைகளின் இடையே வாசகனிடம் எழுப்பும் கேள்விகள் எமது சிந்தனையைத் தூண்டுகின்றன.