குறமகள் (இயற்பெயர்: வள்ளிநாயகி இராமலிங்கம்). கனடா: விளம்பரம் வெளியீடு, டொரன்ரோ, 1வது பதிப்பு, 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).
80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.
குறமகளின் இரண்டு குறுநாவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ‘கூதிர்காலக் குலாவல்கள்’ என்ற முதல் குறுநாவலில் முதற்காதலை இழந்துவிட்டு அந்திமத்தில் மனதில்போட்டு, சுமந்து, நினைத்து அல்லலுறும் திலகராசாவின் கதை கூறப்பட்டுள்ளது. தேவாவின் போதனையால் மனைவி சுந்தரி நோயிலிருந்து விடுபட உண்மையான அன்பைச் செலுத்துகிறாள். சிறாமணி கணவனுக்கு உடலையும் காதலனுக்கு உள்ளத்தையும் கொடுத்துவிட்டு அமைதியற்று வாழ்கிறாள். இதுவே கூதிர்காலக் குலாவல்களின் கதை. ‘அகணிதன் அல்லது நதியின் பிழையன்று’ என்ற கதை இராணுவத்தினரின் பிடியிலிருந்து தப்பியோடி ஒருநாள் இரவுமுழுவதும் மாட்டுக்கொட்டகையில் உயிரைப்பிடித்துக்கொண்டிருந்தவனின் கதை. இக்கதை யாழ்ப்பாண இளைஞர்கள் வெளிநாட்டுப் பணவரவால் வாழும் இடாம்பீக வாழ்க்கையை எடுத்துக்காட்டுகின்றது. கனடாவில் மாதமிருமுறை வெளிவரும் ‘விளம்பரம்’ பத்திரிகையில் இவை முன்னதாக பிரசுரமாகியிருந்தன.