செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). கொழும்பு 6: மாணிக்கப் பிரசுரம், 29, கல்யாணி வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1975. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை).
104 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 3.40, அளவு: 17.5×12 சமீ.
சிரித்திரன் மாத இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பேய்களைப் பாத்திரங்களாகப் பெற்ற ஒரு கற்பனைப் படைப்பு. கொத்தி என்ற பேய்ப்பெண், சுடலைமாடன் என்ற பேய் வாலிபனைக் காதலிக்கிறாள். எறிமாடன் என்ற முரட்டுப்பேய் தடையாக வந்து கொத்தியைத் தானே மணம்புரிய விழைகிறான். குழப்பங்களின் முடிவில் சுடலைமாடனும் எறிமாடனும் சண்டையிட்டு இறக்கின்றனர். கொத்தி தற்கொலை செய்துகொள்கிறாள். யாழ்ப்பாணத்து அரசியல், சமூகக் குறைபாடுகள் பேய்களின் சமூகத்தில் உருவகப்படுத்தப்பட்டுள்ளன. கதைக்கான உள்உருவக ஓவியங்களை ‘சௌ’ என்ற புனைபெயருள் மறைந்திருக்கும் எஸ்.கே.சௌந்தரராஜா வரைந்திருக்கிறார்.