10752 கொல்வதெழுதல் 90: நாவல்.

ஆர். எம்.நௌசாத். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, டிசம்பர்; 2013. (சென்னை 600029:  மைக்ரோ பிரின்ட், நெல்சன் மாணிக்கம் சாலை, அமிஞ்சிக்கரை).

183 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-81969-92-2.

1990இல் கிழக்கிலங்கை முஸ்லிம் கிராமங்கள்  யுத்தத்தின் கோரப்பிடிக்குள் அகப்பட்டிருந்தபோது அம்மக்கள் பட்ட துன்ப துயரங்களை இந்நாவல் பேசுகிறது. பள்ளிமுனை என்னும் கிழக்கிலங்கை முஸ்லிம் கிராமமொன்றின் களத்தில் விரியும் இந்நாவலில் முத்து முகம்மது என்ற இளைஞனின் அரசியல், அன்பியல், போரியல் என்பன விபரிக்கப்படுகின்றன. இந்நாவல் அவன் அனுபவித்த பயங்கரவாதத்தை எதிர்கொண்டு ஒரு பண்பட்ட அரசியல்வாதியாக வளர்ச்சியுறும் நிகழ்வுகளை கதைக்கருவாகக் கொண்டுள்ளது. 1990களில் கிழக்கிலங்கையின் போர்முகத்தை ஓரளவுக்கு வெளிக்கொண்டுவரும் படைப்பாக இது அமைகின்றது. காலச்சுவடு பதிப்பகத்தின் 529ஆவது வெளியீடு. சுந்தரராமசாமி நினைவு குறுநாவல் போட்டியில் பரிசுபெற்ற நட்டுமையின் ஆசிரியர்  தீரன் ஆர்.எம்.நௌசாத்தின் மற்றுமொரு நாவல் இதுவாகும். (சாய்ந்தமருது 3: ஆர். எம்.நௌஸாத், 185/2 பழைய சந்தை வீதி).

ஏனைய பதிவுகள்

15970 தமிழா உன் அரசியல் வரலாற்றைத் திரும்பிப் பார்.

சிவா சுப்பிரமணியம். கொழும்பு: சிவா சுப்பிரமணியம், 1வது பதிப்பு, 1973. (கொழும்பு 8: பிரகதி பிரின்டர்ஸ், 91, கொட்டா ரோட்). 20 பக்கம், விலை: 25 சதம், அளவு: 21.5×14  சமீ. ஆரம்பம், பண்டா