மைதிலி தயாபரன். வவுனியா: கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2014. (வவுனியா: அகரம் பிரிண்டர்ஸ்).
xxiv, 181 பக்கம், சிததிரங்கள், விலை: ரூபா 250., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-41614-0-5.
1997இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையில் மின்னியல் இலத்திரனியல் பொறியியலாளராகப் பட்டம் பெற்றவர் மைதிலி. வவுனியா இரம்பைக்குளம் மகளிர் மத்திய கல்லூரியின் பழைய மாணவியான இவர் பாடசாலை நாட்களிலேயே 1992இலிருந்து கலை இலக்கியத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டவர். மட்டக்களப்பில் நடைபெற்ற உண்மைச்சம்பவம் ஒன்றின் பாதிப்பில் எழுந்த நாவல் இது. இன்றைய இலங்கைத் தமிழ்ப் புலத்துக் காதல்களையும் அக்காதல்கள் எதிர்கொள்ளும் இடைஞ்சல்களையும் தமது பாத்திர வார்ப்புகளினூடாகப் பதிவுசெய்கின்றார். மானிட முயற்சி வருந்தி வருந்தி வெற்றிகொள்ள நினைக்கும் வேளையில் விதி அதனைப் புரட்டிப்போட்டு விதி வலியது என்பதை நாவலில் நிரூபிக்கின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 243314).