10755 BOX கதைப்புத்தகம்.

ஷோபாசக்தி. சென்னை 600005: கருப்புப் பிரதிகள், பி.55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஜுலை 2015. (சென்னை -5: ஜோதி என்டர்பிரைசஸ்).

256 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 20×13 சமீ., ISBN: 978-81-929715-2-0.

BOX கதைப்புத்தகம்.

ஷோபாசக்தி. சென்னை 600005: கருப்புப் பிரதிகள், பி.55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஜுலை 2015. (சென்னை -5: ஜோதி என்டர்பிரைசஸ்).

256 பக்கம், விலை: இந்திய ரூபா 290., அளவு: 20×13 சமீ., ISBN: 978-81-929715-2-0.

இந்நாவலின் முதலாவது கதை சொல்லியாக வானத்தில் இருக்கும் நிலாவும், இரண்டாவது கதைசொல்லியாக ஓர் குழந்தையும் நாவலினூடாக கதைசொல்லிகளாக நகர்ந்து சென்று கொண்டிருந்தன. நாவல் ஒருபக்கத்தில் இருந்து மட்டும் வாசகரை நோக்கிச் சுழலாது, கதைக்களத்திலே இருந்த பலதரப்புக் கதைமாந்தர்களினூடாக, அவர்களினுடைய பார்வையில் இருந்துகொண்டே கருத்தியல் வாதங்களை முன்வைக்கின்றது. முள்ளிவாய்க்காலின் பின்னரான வன்னிக் கிராமமொன்றின் கதைப்பிரதி இதுவாகும். பெரியபள்ளன் குளத்தை எங்கிருந்தோ வந்தடையும் ஊமைச்சிறுவன் ஒருவனைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை. சிறுவன் யார் என்ற மர்மத்தை கதையின் இறுதியில் அழுத்தமாகவும் பொருத்தமாகவும் வெளிப்படுத்துகின்றார். இது யுத்தத்தின் ஊடும் பாவுமான உபகதைகளை வைத்து அழகாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அமையாள் கிழவி, சிறுமி இதயராணி, ஆகியோருடன் ஆதாம் சுவாமி கல்லறையைத் தனது வீடாக்கிக் கொண்ட அச்சிறுவனைச் சுற்றியே  பெரும்பாலும் உபகதைகள் நகர்த்தப்படுகின்றன. ஷோபாசக்தியின் வித்தியாசமானதும் தனித்துவமானதுமான எழுத்துநடை இந்த மூன்றாவது நாவலிலும் செழுமையுடன் தொடர்கின்றது. ஏற்கெனவே கொரில்லா, ம். ஆகிய நாவல்களைத்தொடர்ந்து இது வெளிவந்துள்ளது.  ‘பெட்டி’ என்ற பதத்தின் பல்வேறு பயன்பாட்டு அர்த்தங்கள் கதை முழுவதும் வியாபித்திருக்கின்றன. முள்ளிவாய்க்கால் யுத்தமும், இராணுவத்தின் சித்திரவதைமுறைகளும் மாத்திரமல்லாது பெட்டி என்ற பதப்பிரயோகத்துக்கு மேலும் பல நிகழ்வுகள் பொருத்தமாகக் கையாளப்பட்டு நூலின் தலைப்பினை அர்த்தமுள்ளதாக்குகின்றன.

ஏனைய பதிவுகள்