ஜுனைதா ஷெரீப் (இயற்பெயர்: கே.எம்.எம்.ஷெரீப்). காத்தான்குடி: கே.எம்.எம்.ஷெரீப், 27, லேக் டிரைவ், 1வது பதிப்பு, டிசம்பர் 1986. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்).
(5), 195 பக்கம், விலை: ரூபா 22., அளவு: 18×12 சமீ.
ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த தொழில் நுட்ப உத்தியோகத்தரொருவர் தான்; வசித்த கிராமத்தைச் சேர்ந்த பணக்காரரும் முரட்டுப் பிடிவாதக்காரருமான வர்த்தகர் ஒருவரின் மகளைத் திருமணம் செய்து, மாமனாராலும் கல்வியறிவில்லாத மனைவினாலும் அனுபவிக்க நேரும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. பணத்துக்கும் கல்விக்குமிடையிலான போராட்டங்கள் விரிவாகவும் ஆழமாகவும் நாவலில் அலசப்பட்டுள்ளன. மனைவியொருத்தி எவ்வாறெல்லாம் தன் கணவனுக்கு இன்பங்களையும் துன்பங்களையும் கொடுக்கிறாள் என்பது யதார்த்தமாகக் காட்டப்பட்டுள்ளது. தினகரன் பத்திரிகையில் தொடர் நவீனமாக வெளியிடப்பட்ட கதை பின்னர் நூலாக உருவெடுத்துள்ளது. இந்நாவல் பத்திரிகையில் வெளிவந்தபோது வாசகர்களால் எழுதப்பட்ட பல விமர்சனக் கடிதங்கள் சுருக்கமாக நூலின் முன் பக்கங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.