செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 75/10ஏ, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).
vi, 238 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 17×12.5 சமீ., ISBN: 978-955-1624-08-8.
‘இலங்கை வரலாற்றில் மீண்டும் ஈழத்தமிழர்கள் ஏமாந்து போனார்கள். முப்பது ஆண்டுகளாக நம்பியிருந்த மாமலை சாய்ந்ததும் ஈழப்போராட்டத்தின் இறுதியில் கடைசி அத்தியாயம் நிறைவு பெற்றது. தமிழ்மக்கள் நம்பி ஏமாந்த வரலாற்றின் இறுதி அத்தியாயங்கள் எழுதப்பட்டன. நம்பிக்கைகள் தகர்ந்துபோயின. மாபெரும் போராட்ட வரலாறு இடைநடுவில் அவலமாக நிறைவுபெற்ற நிகழ்ச்சியை நம்பவே முடியவில்லை. ஒரே நம்பிக்கை- அறிந்த வரலாறு அது. எங்கோ ஒரு பின்தங்கிய கிராமத்தில் பிறந்து மாபெரும் போராட்ட வீரனாக மாறிய தலைவரிடம் கொண்டிருந்த தமிழ் மக்களின் அபிலாசைகள் சிதைந்து போயின. முள்ளிவாய்க்கால் கரையில் கரைந்து போயின. அந்த வரலாற்றை விரிவாக எழுதவேண்டும். அதன் முன்னுரையாகவே இந்த நாவல் அமைகின்றது. இந்த நாவலின் மூன்றாம் பாகமே இறுதிப் போரின் இறுதி நாட்களைப் பேசினாலும், நாம் ஏமாந்த கதையைக் கூடியவரை முன்வைக்க முயன்றிருக்கின்றேன் என்ற நமபிக்கையுள்ளது. நம்பி ஏமாந்த கதையைப் பொழிப்பாக இந்த நாவலில் விபரித்துள்ளேன். கத்திமீது நடப்பதுபோல இருந்தாலும், கூறியே ஆகவேண்டியதாக எனக்குப் படுகின்றது. அபரிமிதமான நம்பிக்கைகள் இழந்துபோனதை நம்பமுடியாதுள்ள இடரை என்னென்பேன்’ – செங்கை ஆழியான் (முன்னுரையில்)