10762 வாழும் காலம் யாவிலும்: நாவல்.

மைதிலி தயாபரன். வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2014. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசுவாமி கோவில் வீதி).

xx, 194 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-41614-1-2.

விவாகமும் விவாகரத்தும் எமது மதங்களில் எவ்வாறு ஆளுமை செலுத்துகின்றன என்பதை சைவ, இஸ்லாமிய, சிங்கள, கிறீஸ்தவ திருமண முறைகளை நன்கு உள்வாங்கி எழுதப்பட்டுள்ள இந்நாவல் பெரும்பாலும் பெண்ணியம் சம்பந்தமானதாகவே அமைந்துள்ளது. சட்டம், சம்பிரதாயம், மனிதாபிமானம், பண்பாடு என்ற வகையில் பெண்ணியம் சிறப்பாக அலசப்பட்டுள்ளது. ஆண்களை எதிரிகளாகக் கருதாமல், சமுதாய அமைப்பில் உள்ள குறைகளைத் தகுந்தமுறையில் சட்டத்தின் மூலமும் மனிதாபிமானத்தின் மூலமும் சமூக குடும்ப முன்னேற்றத்தின் அடிப்படையிலும்; களையவேண்டும் என்ற  சிந்தனை இவரது நாவல்வழியாக வெளிப்படுகின்றது. திருமண நடைமுறைகள், விவாகரத்து தொடர்பான பல்மதச் சட்டங்கள் இந்நாவலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

12837 – திருக்குறள் ஆய்வுரை: பாகம் 2.

ஆ.வடிவேலு. பருத்தித்துறை: ஆ.வடிவேலு, ஓய்வுநிலை அதிபர், 1வது பதிப்பு, ஆனி 2013. (பருத்தித்துறை: தீபன் பதிப்பகம், பிரதான வீதி). xxx, 108 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20 x 14 சமீ.,

12493 – மகாஜனன் பாரிஸ்-மலர் 1993.

சின்னத்துரை மனோகரன் (இதழாசிரியர்), ப. பாலசிங்கம் (இதழ் ஆலோசகர்). பிரான்ஸ்: எம்.சின்னத்துரை, பாரிஸ் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், 73, Rue Doudeauville, 75018,Paris1வது பதிப்பு, செப்டெம்பர் 1993. (அச்சக விபரம்