10764 விடியலைத்தேடி.

செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 75/10ஏ, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).

vi, 67 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 19×14 சமீ., ISBN: 978-955-1624-13-2.

இலக்கியத்துக்கான சாகித்திய ரத்னா விருதுபெற்ற செங்கை ஆழியானால் போர்க்காலப் பின்னணியில் எழுதப்பெற்றதும், 1948இல் இலங்கை சுதந்திரம்பெற்றதிலிருந்து இன்றுவரை அரசியல்வாதிகளையும், ஆயதப் போராட்டத்தையும் நம்பி ஏமாந்து மீண்டும் பூச்சிய நிலையினை வந்தடைந்திருக்கும் ஈழத்தமிழரின் சமகாலத்தைச் சித்திரிக்கும் ஓர் அரசியல் நாவல் இது. மன்னாரிலுள்ள கிராமமான சுங்கன்குழியில் நாவல் ஆரம்பமாகின்றது. அம்பலவாணர் மகன் சண்முகம் இராணுவ நகர்வை எடுத்துச்சொல்லி பூநகரிக்கு இடம்பெயர்கின்றனர். அங்கிருந்து பரந்தன், கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு என இடம்மாறி முல்லைத்தீவு வருகின்றனர். இடையில் இழந்த உடைமைகள் உயிர் இழப்புகள் ஏராளம். 56 பேருடன் புறப்பட்ட அம்பலவாணர் குடும்பம் இருபது பேருடன் மீண்டும் சுங்கன்குழியை நாடித்திரும்புகின்றனர். ரசனைக்காக இடையில் போராளி சசீதரன் -வசந்தி காதலும் கதையுடன் இழையோடுகின்றது. போரினால் ஏற்பட்ட இழப்புகளை விபரிப்பதில் பெரும்பாலும் கதை நகர்கின்றது. அவ்வகையில் குறிப்பிடத்தக்கதொரு போர்க்கால சமூக வரலாற்றுப் பதிவாக இந்நாவல் அமைகின்றது.

ஏனைய பதிவுகள்