A.இக்பால். கொழும்பு 13: பேசும் பேனா வெளியீடு, 5-1/20, நவீன சந்தை, கொட்டஹென, 1வது பதிப்பு, டிசம்பர் 1996. (கொழும்பு 13: Quick Graphics Print, 5-1/20 நவீன சந்தை, கொட்டஹென).
(6), 62 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 21.5×14 சமீ.
இந்நூலில் கவிஞர் ஏ.இக்பால் எழுதிய 13 இலக்கியக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த சி.வை.தாமோதரம்பிள்ளை, நாட்டார் பாடல், அல்லாமா கலாநிதி எம்.எம்.உவைஸ், பாரதியும் பத்திரிகையும், இலங்கை இலக்கியத்தில் இளங்கீரன், ஜோஸப் கொன்ஸ்டான்டைன் பெஸ்கி எனும் வீரமாமுனிவர், இலக்கியப் பணியில் அறிஞர் சித்திலெவ்வை, தனித்தமிழ் இயக்கம், அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர்: ஓர் இலக்கியப் பார்வை, பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன், ஆர். ஷண்முகசுந்தரம், ஐரோப்பியரின் தமிழ்ப் பணிகள்,அர்.ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள் நாவல் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30504).