செல்வா கனகநாயகம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xviii, 180 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-458-4.
2010இல் வெளிவந்த தமிழியல்-காலச்சுவடு வெளியீடான ‘நெடுநல்வாடை: இலக்கிய வரலாறும் திறனாய்வும்’ என்ற நூலின் விரிவாக்கப்பட்ட வடிவமே இந்நூலாகும். இதில் இலக்கியத் திறனாய்வு தொடர்பாக ஆசிரியரின் தமிழ்க் கட்டுரைகளும், ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழாக்கம் செய்யப்பட்ட கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இலக்கியத் திறனாய்வும் இலக்கிய வரலாறும், பின்காலனித்துவ இலக்கியப் போக்குகள், இலங்கையில் அரசியலும் இலக்கியமும், எனது கற்பனையில் இலங்கை, அண்மைக்கால ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றின் கட்டமைப்பு, நெடுநல்வாடை: மொழிபெயர்ப்பும் அழகியலும், மதங்கசூளாமணி: நூலும் பின்னணியும், நவீன ஈழமும் அச்சிபியின் ‘கலையும் கட்டமைப்பும்’, ஒரு திறனாய்வாளனின் உருவச் சித்திரம், சிவத்தம்பியின் ஆய்வு நோக்கில் மதமும் இலக்கியமும், பேராசிரியர் தனிநாயக அடிகளார், சடங்கு: சில குறிப்புகள், சியாம் செல்வதுரை: ஒரு மதிப்பீடு, இரத்தம் சிந்தும் இதயங்கள், சோ.பத்மநாதனும் புனை கவிதையும், முதுவேனில் பதிகம், பேராசிரியர் க.சிவத்தம்பியும் தமிழில் இலக்கிய வரலாறும் ஆகிய 17 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.