எஸ்.முரளிதரன் (பதிப்பாசிரியர்), அ.சுபாஷினி (துணையாசிரியர்). கொழும்பு: கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு, 8ஆம் மாடி, செத்சிறிபாய, பத்ரமுல்ல, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
x, 211 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ.
தமிழ் இலக்கியம் தொடர்பான பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பாக இம்மலர் வெளிவந்துள்ளது. இலக்கியத் திறனாய்வு: மேலைப்புல அனுபவங்கள் (சபா.ஜெயராசா), இலங்கையின் இரு பெரு நாடக மரபுகள்: தமிழ்க் கூத்தும்-சிங்கள நாடகமும் (சி.மௌனகுரு), புதிய அறிவுப் பிரவாகமும் வாசிப்புப் பண்பாடும் (சோ.சந்திரசேகரன்), குலோத்துங்கன் கவிதைகள் சில அவதானிப்புகள் (க.அருணாசலம்), ஈழத்துத் தமிழ்த் திறனாய்வு வளர்ச்சி (துரை மனோகரன்), இலங்கையர்கோன்: ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் வெள்ளி முளைப்பு (வ.மகேஸ்வரன்), ஜெயகாந்தனின் யுகசந்தி: ஒரு நோக்கு (க.இரகுபரன்), கம்பன் காட்டும் இலங்கை (ஸ்ரீ பிரசாந்தன்), தமிழ் – சிங்கள மொழி ஆய்வு (த.கனகரத்தினம்), ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதை உலகம் (எஸ்.முரளிதரன்), இனி வரும் திறனாய்வு (மு.பொன்னம்பலம்), இலக்கியமும் விழாக்களும் (பத்மா சோமகாந்தன்), ஈழத் தமிழர்களின் கலாசாரத்தில் நாட்டார் பாடல் பற்றிய ஒரு பார்வை (மா.கணபதிப்பிள்ளை), மரபு வழி ஆடலில் சாகித்தியம் (வாசுகி ஜெகதீஸ்வரன்), தமிழ்ச் சரித்திரத்தின் பக்கங்கள்: பேராசிரியர் கா.சிவத்தம்பி (அ.சுபாஷினி), ஈழத்துத் தமிழ்ச் சொற்பொழிவின் செல்நெறி (ச.லலீசன்), இறைவாக்குப் பெற்ற அருள்வாக்கி (சாந்தி முஹியித்தீன்), சிங்கள தமிழ் ஒற்றுமை (டி.டி.நாணயக்கார), ஈழத்துத் தமிழ்க் கவிதைகளில் குடியுரிமைப் பிரச்சினையின் பிரதிபலிப்பு (செ.திருநாவுக்கரசு), மலையக ஒப்பாரிப் பாடல்களில் மறைந்துள்ள வரலாறும் வாழ்வியல் கூறுகளும் (எம்.ஸ்டாலின் சிவஞானஜோதி), எஸ்.பொன்னுத்துரையின் ‘சடங்கு” என்னும் நாவலின் சமூக குறியீடு (ஜயசுமன திசநாயக்க) ஆகிய 21 கட்டுரைகள் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களை விளக்கும் வகையில் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.