10774 கம்பனில் நான்.

அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா).  யாழ்ப்பாணம்: யாழ். இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசாமி கோவில் வீதி).

211 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 19×13 சமீ., ISBN: 955-8715-36-0.

கம்பராமாயணத்தில் மிகுந்த விருப்பும் ஈடுபாடும் கொண்டுள்ள அகளங்கன் அவர்களின் கம்பராமாயண ஆளுமையை இந்நூல் வெளிப்படுத்துகின்றது. இந்நூலில் இரசனைக் கட்டுரைகளும் ஆய்வுக் கட்டுரைகளுமாக இரண்டு வகையில் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. கம்பனின் கவித்துவம்- தனித்துவம்- மகத்துவம், கம்பராமாயணத்தின் முதற் பாடல், தசரதரும் மனைவியரும், சகோதர பாசம் மிக்கவன் சத்துருக்னன், இராமன் சீதை காதல் இராமாயணத்திற்கு அவசியம் தானா?, இராமனோடு தொடர்புகொண்ட உயிரினங்கள், சூர்ப்பனகை ஒரு நகைச்சுவைப் பாத்திரமா?, சூர்ப்பனகை தனது மூக்கைத் தானே அரிந்தாளா?, கம்பனின் சிலேடை நயம், வாலி, சுக்கிரீவன் முதலானோர் குரங்குகளா? வானரர்களா?, இராமன் இலக்குவனுக்குத் தமிழிலும் அறிவுரை கூறினான், வாலி, சுக்கிரீவன், அனுமான் ஆகியோர் பற்றிய இராமனின் அபிப்பிராயம், பலரும் போற்றிய பரதன், இடைச் செருகற் பாடல்கள், இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன, கம்பன் கவனிக்கத் தவறியவை ஆகிய 16 கட்டுரைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. சூர்ப்பனகை ஒரு நகைச்சுவைப் பாத்திரமா? என்ற கட்டுரை இரசனையும் சர்ச்சையும் கொண்டது. வாலி, சுக்ரீவன் முதலானோர் குரங்குகளா?, கம்பன் கவனிக்கத் தவறியவை, இராமன் சீதை காதல் இராமாயணத்துக்கு அவசியம் தானா? தசரதரும் மனைவியரும் ஆகிய கட்டுரைகள் விவாதத்துக்குரியவை.

ஏனைய பதிவுகள்

10530 கரை சேரும் கடிதங்கள்.

கவிதா விக்னேஸ்வரன். நோர்வே: கவிதா விக்னேஸ்வரன், 1வது பதிப்பு, ஜுலை 2002. (கொழும்பு 6: புதிய கார்த்திகேயன் அச்சகம்). 105 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×11.5 சமீ. புலம்பெயர் சூழலில் நோர்வேயில் உருவாகிய