ஆசி.கந்தராஜா. சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, முதல் தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, முதல் தெரு, சூளைமேடு).
224 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ., ISBN: 978-93-81322-28-4.
அவுஸ்திரேலியாவில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வாழம் பூங்கனியியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்பப் பேராசிரியரான ஆசி.கந்தராஜா, ஜேர்மனி, யப்பான், அவுஸ்திரேலியா, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தவர். தொழில் நிமித்தம் ஆபிரிக்கா, அரேபியா உட்பட உலகளாவிய கல்விப் பயணங்களை மேற்கொண்டவர். தமது அறிவையும் அனுபவத்தையும் படைப்புக் கட்டுரைகளாகத் தந்துள்ளார். இந்நூலில் ஏழு கட்டுரைகள் அடங்கியுள்ளன. சாத்தானின் விரல்கள் எனப்படும் முருங்கைக் காயும், கறுத்தக் கொழும்பான் மாம்பழமும், வரக மான்மியமும், தல விரட்சமான பனையும், கைதடி ஊர் நினைவுகளும், தமிழ்ப்பற்றும் இப்புனைவுகளின் ஆதாரசுருதி. இத்தகைய படைப்புகளை ஆசிரியரைத் தவிர வேறு எவரும் எழுத முடியாது என்பதைத் துணிந்து கூறலாம். ஆசி.கந்தராஜாவின் ஏழு கட்டுரைகள், கறுத்தக் கொழும்பான், தலவிருட்சம், வரகு மான்மியம், சாத்தானின் விரல்கள், கிழக்கும் மேற்கும், கோளமயமாதல், ஒட்டாத மண் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.