சி.விமலன். பருத்தித்துறை: உயில் வெளியீடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2013. (அல்வாய்: மதுரன் கிறாப்பிக்ஸ் அன்ட் ஓப்செட் பிறின்டர்ஸ், அல்வாய் வடமேற்கு).
137 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-44157-0-6.
அல்வாயைப் பிறப்பிடமாகக் கொண்ட விமலன், யாழ். பண்பாட்டு அமைச்சின் விளையாட்டுத்துறை அலுவலக உதவி முகாமையாளராகவும், ஜீவநதி சஞ்சிகையின் உதவி ஆசிரியராகவும், நமது ஈழநாடு பத்திரிகையின் ஒப்புநோக்காளராகவும், பத்தி எழுத்தாளராகவும் பணியாற்றியவர். இவர் அவ்வப்போது எழுதிய 11 இலக்கிய விமர்சன ஆய்வுக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பேராசிரியர் கைலாசபதியும் தெளிவத்தை ஜோசப்பும், காலமறிந்து கூவிய சேவல்: ஈழநாடு சிறுகதைகள், ஈழத்துச் சிறுகதைகளில் தொன்மக் கதைகூறல், மூன்றாம் சிலுவையில் இருந்து உயிர்த்தெழத் தவறிய உமா வரதராஜன், படைப்புக்களில் செவ்விதாக்கம்: செய்தவையும் செய்யவேண்டியவையும், சமூக அழுத்தத்தின் பல்பரிமாணம்: நித்திலவர்ணனின் புத்தாக்க செருகேடு, நவீன இலக்கியப் புனைவுகளில் உருவ-உள்ளடக்கச் சொல்லாடல்கள், துரோணாச்சாரியார் துரோகி இல்லையா?: அகளங்கனின் வேரும் விழுதும் நூலை முன்வைத்து ஒரு மறுவாசிப்பு, பண்பாட்டின் சேகரமும் அறிவியலின் புதினமும்: செங்கை ஆழியானின் குந்தி இருக்க ஒரு குடிநிலம், ஈழத்துச் சிறுகதைகளில் பிராணிகள் பற்றிய மனிதநேய வார்த்தெடுப்புகள், இனத்துவ முரண்பாட்டின் நெருக்கடிகள்: தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. நீண்ட தேடலின் வழியாக நுண்ணிய நோக்கும் அகன்ற பார்வையும் இக்கட்டுரைகளில் வெளிப்படுகின்றன. தன் கருத்துக்கு ஆதாரமாக பல நூல்களைக் குறிப்பிடும் இவர் தன் கருத்தைக் காழ்ப்புணர்வின்றி ஆணித்தரமாகப் பதிவுசெய்கிறார். இந்நூலின் வெளியீடு, 23.2.2013 வெளியீடு தேவரையாளி இந்துக் கல்லூரியில் நடந்தது.